Sunday, September 25, 2011

அன்புடன் அழைக்கின்றோம்!





அன்புடன் அழைக்கின்றோம்!
=========================

எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
(NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001

சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத்தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.

குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.

இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.


ஒருங்கிணைப்பாளர்: கிரிஜா மணாளன், திருச்சி


விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்

No comments:

Post a Comment