அன்பார்ந்த கவிதை ஆர்வலர்களே!
வணக்கம்.
நமது குறுஞ்செய்தி (SMS) கவிஞர்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் சகோதரிகளில், நான் அண்மையில் நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் ஆண்டுவிழாவில் சந்தித்த திருமதி சுமதி அவர்களும் ஒருவர்.
சுமதியின் கவிதைகள் எனது வலைத்தளங்களிலும், பெரிய கவிதைத் தளமான www.vaarppu.com மிலும் உலகளாவிய பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளன. சமுதாயப்பார்வையும், பெண்ணியச் சிந்தனைகளும் பொதிந்த இவரது கவிதைகள் நான் அங்கம் வகிக்கும் www.groups.google.com/group/ anbudan, thamizhthendral & thamizh amutham, muththamizh குழுமங்களில் வெளிவரவிருக்கின்றன. இணையதளக் குழுமங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ள குறுஞ்செய்திக் கவிஞர்கள் திருமதி தனலட்சுமி பாஸ்கரன், ரம்யா, கலைவாணி ஆகியோரைத் தொடர்ந்து, திருமதி சுமதி அவர்களும் புகழ்பெற்றுத் திகழ எனது நல்வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
திருச்சி
No comments:
Post a Comment