
கவிதை எழுவதிலும், பிறர் கவிதைகளை ரசிப்பதிலும் என் ஓய்வுநேரத்தின் பெரும் பகுதியைச் செலவிடும் எனக்கு, இதழுலகில் வாய்ப்புகள் கூடி வருமுன், தற்போது பிரபலமாகியுள்ள “அலைபேசி குறுந்தகவல்” வாயிலாக படைப்பாளர்கள் அனுப்பி வரும் “குறுந்தகவல் கவிதைகள் ஊடகம்” நல்ல வரவேற்பையும், வாய்ப்புகளையும் அளித்து வருகிறது. எனது இணைய நண்பர்கள் வாயிலாக, பல இணையதளங்களில் எனது படைப்புகள் பிரசுரமாகி, என்னை மகிழ்வித்துவரும் நிலையில், நமக்கென்று ஓர் வலைத்தளத்தை உருவாக்கி, அதில் நம் கவியார்வத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு நான் துவக்கியுள்ள வலைத்தளம் இது.
எங்களது “குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப”த்தின் ‘ 2 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் 6 வது சந்திப்பு விழா நிகழும் இவ்வேளையில் எனது இந்தக் கவிதைத்தளம் துவங்கப்படுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன். எனக்கு இம்முயற்சியில் வழிகாட்டியாக இருக்கும் மதிப்பிற்குரிய படைப்பாளரும், இணையதளங்களில் எங்கள் கவிஞர்களை அறிமுகப்படுத்தி உலகளாவிய வாசகர்களைப் பெற்றுத்தந்துள்ள திரு. கிரிஜா மணாளன் (செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்/ திருச்சி மாவட்டக்கிளை) அவர்களுக்கு எனது நன்றி!
இதில் எனது படைப்புகளோடு, எங்கள் “அலைபேசி குறுந்தகவல் கவிஞர்கள்” பலரது கவிதைகளும் இடம்பெறவிருக்கின்றன.
என் அன்புக்குரிய இணய வாசக அன்பர்கள் அவற்றை ரசித்து, அளிக்கும் பின்னூட்டங்கள் எங்கள் கவியாற்றலை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள துணையா யிருக்கும் என்ற நம்பிக்கையோடு துவங்குகிறேன்.
நன்றி
அன்புடன்,
சேலம் சுமதி
====================================================================
No comments:
Post a Comment