Thursday, October 20, 2011


என்னில் உன்னை!
================

நினைத்தேன் உன்னை
மழையெனப் பொழிந்தாய் அன்பாய்,
ஆயினும்
வறண்ட நிலமாய் நான்!
உன்னில் கிளர்ந்தெழும் கடுங்கோபம்
என்னில் உன்னை
நீர்த்துப்போகச்செய்திடுமோ?

எனக்கும் உனக்குமான
அன்புப் பரிமாற்றத்தினிடையே
தலைதூக்கும் சர்ப்பத்தின்
கழுத்தை நசுக்கி
கைகோர்ப்போம்!

============================

கேள்விக்குறி போட்டு
வியப்புக்குறியாய் மாறி
முற்றுப்புள்ளியாய் மாறாமல்,
தொடர்புள்ளியாய்.........
தொடரட்டும் நம் நட்பு.
கவிதையின் வரிகளாக
கவிதையின் பொருளாக
கவிதையின் இலக்கணமாக நாம்!
எதற்கு வேறொரு புதுக்கவிதை,
தோழா?

=============================


தடித்த உன் வார்த்தைகளால்
எரிந்துபோய்விட்ட என்னை
மீண்டும் எரிக்கமுடியாது உன்னால்
சாம்பலாகிப்போன என்னை.

---------------------------------

மகாராணியாக
மனோபலத்துடன் ஆடுகிறேன்
ராஜா வீழ்ந்தபின்னும்
இதர சேனைகளுடன்
அந்த சதுரங்க விளையாட்டில்.
---------------------------------

No comments:

Post a Comment